50 கலைக்குழுவினர் 500 கலைஞர்கள் பங்கேற்ற தமிழன்டா சங்கமம் விழா 2025
Tamilnadu Thoothukkudi
By admin on | 2025-01-16 20:59:24
50 கலைக்குழுவினர் 500 கலைஞர்கள் பங்கேற்ற தமிழன்டா சங்கமம் விழா 2025

அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்பட 50 கலைக்குழுவினர் 500 கலைஞர்கள் பங்கேற்ற தமிழன்டா சங்கமம் விழா 2025...

பாரம்பரிய உணவுகள், கலைகள், மருத்துவத்தை மேம்படுத்திடவும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு புத்துயிர் ஊட்டும் தமிழன்டா சங்கமம் தூத்துக்குடியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையொட்டி தமிழ்நாட்டின் கலை பாரம்பரியத்தை பறைசாற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு புத்துயிர் ஊட்டும் தமிழன்டா சங்கமம் தமிழன்டா இயக்கம் கலைக்குழு கலைக்கூடம் கே சின்னத்துரை & கோ தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சத்யா  இணைந்து நடத்திய தமிழன்டா சங்கமும் விழா தூத்துக்குடியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.

மேலும் தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் தமிழன்டா சங்கமம் விழாவை முன்னிட்டு மினி மராத்தான் போட்டி ஓவிய போட்டி போன்றவை நடந்தது அதன் பின்னர்  பாளையங்கோட்டைதிரு இருதய சகோதரர் சபை உயர் தலைவர் ஏ விக்டர் தாஸ்,தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர்  பாரம்பரிய வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி, விவசாய பொருள் கண்காட்சி, நெல் விதைகள், அரிசி வகைகள் கண்காட்சியை திறந்து வைத்து விழா பேருரை ஆற்றினார்கள்.

பாரம்பரியத்தை காக்க வேண்டும் அடுத்த  தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது குறித்து விழா பேருரை ஆற்றினார்கள். இந்த விழாவில் திரு இருதய சகோதர சபை துணை உயர்தலைவர் சகோ. பெனடிக்ட் தலைமை தாங்கி பாரம்பரியத்தை பற்றி விரிவாக பேசினார். விழாவில் தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஆரோக்கியம் பீற்றர்,  தலைமையாசிரியர் மரிய ஜோசப் ஆண்டனி ஆகியோர் விரிவாக பாரம்பரியத்தையும் உணவுகளையும் மருத்துவத்தையும் பேசினார்கள். இந்த விழாவில் உயிர் மூச்சு திரைப்பட தயாரிப்பாளர் கவிஞர் ஜோதிமணி வாழ்த்துரை வழங்கினார். விழாவில் குப்பைகளை எரிக்க வேண்டாம் நோய்களை பரப்ப வேண்டாம் என்கின்ற தலைப்பில் தமிழன்டா இயக்கத் தலைவர் ஜெகஜீவன் பாடிய பாடல் மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட அவற்றை திரு இருதய சகோதரர் சபை உயர்தலைவர் விக்டர் தாஸ் பெற்றுக் கொண்டார்.

விழாவில் பாரம்பரிய உணவு திருவிழாவை தொடங்கி வைத்து சமையல் போட்டியையும் தொடங்கி வைத்து பேசினார் பிளாக் ஃபாரஸ்ட் லீட் கேட்டரிங் கல்லூரி தாளாளர் சி சண்முகம். விழாவில் வாசன் கண் மருத்துவமனை சார்பில் இலவசமாக கண் சிகிச்சை முகாம் வர்மம் மூலம் நோய்கள் நீக்கும் முகாம் அக்குபஞ்சர் மருத்துவ முகாம் சித்த வைத்திய மருத்துவ முகாம் நாடி வைத்திய முகாம் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் 15 பேர் இயற்கை யோகா மருத்துவத்தை வழங்கினார். மொத்தம் 60க்கு மேற்பட்ட சித்த மருத்துவர்கள், இயற்கை மருத்துவர்கள், அக்குபஞ்சர் மருத்துவர்கள், வர்மம் வைத்தியர்கள் உட்பட பலர் பெற்றனர். பல நோயாளிகளுக்கு நோய்களை நீக்கினார்கள். வந்தவரை வரவேற்று கவுரவித்து பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார் தமிழன்டா இயக்க தலைவர் ஜெகஜீவன்.

விழாவில் தமிழன்டா இயக்க துணை தலைவர் எம் கே காளிதாஸ்,சைன் யோகா பவர் நிறுவனர் சி தனலட்சுமி, திரைப்பட பின்னணி பாடகர் கல்லூர் மாரியப்பன் ஆகியோர் பாரம்பரிய சிந்தனைகளை  எடுத்துரைத்தார்கள்.

மேலும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம். சி..சண்முகையா மற்றும் அதிமுக வர்த்தக அணி மாநில செயலாளர் சி. த. செல்லபாண்டியன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தார்கள்.

விழாவில் தொழில் அதிபர் மில்லை ராஜா மேலூர் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன், மாநில அளவிலான பாரம்பரிய போட்டிகளை எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேரா. மருத்துவர் ஜேம்ஸ் சுந்தர் சிங் தொடங்கி வைத்தார். நாடி வைத்தியத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில மகளிர் அணி துணைத் தலைவர் சண்முக குமார் தொடங்கி வைத்தார்.

முதல் நாள் நிகழ்வில் பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரஸ்னா எஸ்பி மாரியப்பன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தமிழ்நாடு யோகா கூட்டமைப்பு சுந்தரவேல், தமிழன்டா இயக்க துணை தலைவர்கள் வேலவன் சங்கீதா, ஆறுமுகநேரி எம் கே காளிதாஸ், வடக்கு அழகு நாச்சியார்புரம் சுப்பிரமணியன்,  தமிழன்டா இயக்க திருநெல்வேலி மாவட்ட தலைவர் தோட்டக்குடி மாரியப்பன், தூத்துக்குடி மாவட்ட தமிழன்டா இயக்க தலைவர் குட்டி ராஜா, தமிழன்டா இயக்க துணை பொதுச்செயலாளர் மாரிமுத்து, சோபியா ராணி,இன்ஜினியர் அனிதா,சகா கலைக்குழு சங்கர் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

50க்கும் மேற்பட்ட குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. புத்தனேரி செல்லப்பா தலைமையில் அகில இந்திய வானொலி அறிவிப்பாளர் முனைவர் சந்திர புஷ்பம்,ஜெபமாலை திபு, சோபியா ராணி உட்பட பலர் பட்டிமன்றத்தில் பாரம்பரிய கலைகள் அருகி வருகிறதா? பெருகி வருகிறதா? என்கின்ற தலைப்பில் பேசினார்கள்.

மேலும் மதுரை வானவில் மல்லர் கம்பம் குழு எல்லோரையும் வியக்க வைத்தது.50க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பாரம்பரிய விளையாட்டு போட்டியாளர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்ட கிராமிய கலைஞர்களின் விழிப்புணர்வு பேரணி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கியது.

பேரணியை உயிர் மூச்சு திரைப்பட தயாரிப்பாளர் கவிஞர் ரா. ஜோதிமணி தொடங்கி வைத்தார். 

விழாவில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமானது, புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இருந்து தொடங்கி தமிழ்சாலையில் உள்ள பெரியார் சிலை வரை சென்று திரும்பி மீண்டும் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை அடைந்தது. பேரணியை அதிமுக கழக மாநில செயலாளர் செல்லபாண்டியன் நிறைவு செய்து வைத்தார்.

மேலும் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பழைய கஞ்சியை யாரும் சாப்பிடுவது கிடையாது இதை கருத்தில் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் பழைய கஞ்சியை சாப்பிட்டு பழையதை நினைத்துக் கொண்டனர்.

சிறுவர்கள் இளைஞர்கள் முதியவர்கள் போன்றோர் பழைய கஞ்சியை மறக்கக்கூடாது என்பதற்காக அனைவரும் பழைய கஞ்சி பச்சை மிளகாயை சாப்பிட்டனர் தமிழன்டா இயக்க தலைவர் ஜெகஜீவன் பச்சை மிளகாய் கடித்து பழைய கஞ்சியை சாப்பிட்டு தொடங்கி வைத்தார். அதற்கு பிறகு வெத்தலை போடும் கலாச்சாரம் மறைந்து கொண்டிருக்கிறது இதனால் கேன்சர் நோய் பெருகி வருகிறது என்பதை நினைவுபடுத்தி வெற்றிலை போடும் நிகழ்வையும் நிகழ்த்தி காட்டினார். இந்த விழாவில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் நாட்டுப்புற கலைஞர்களின் தாரை தப்பட்டைகள் முக்கிய பூங்காக்களில் நடந்தது.  இந்த நிகழ்வை கீதா பள்ளி குழுமங்களின் தாளாளரும் கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளருமான ரா. ஜீவன் ஜேக்கப் தொடங்கி வைத்தார். மேலும் மாலையில் நடந்த நிறைவு விழா நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  - திமுக வடக்கு மாவட்ட செயலாளர் பி கீதா ஜீவன் கலந்து கொண்டு நாட்டுப்புற கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் தமிழன்டா விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

இந்த விழாவில் திமுக மாநகர செயலாளர் எஸ் ஆர் ஆனந்த சேகரன் தலைமை தாங்கினார் விழாவில் திருநெல்வேலி அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் அறிவிப்பாளர் கிராமத்து குயில் சந்திர புஷ்பம் கலந்து கொண்டு முன்னிலை வகித்தார். விழாவில் உயிர் மூச்சு திரைப்பட தயாரிப்பாளர் ஜோதிமணி நோக்க உரை நிகழ்த்தினார். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலைஞர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பன்முக பறை ஆட்டம் அனைவரது கால்களையும் ஆட்டம் போட வைத்தது. கிராமிய மனம் கமலும் வகையில் கொக்கலி ஆட்டம், மயிலாட்டம், நடைபெற்றது 20 க்கும் மேற்பட்ட வில்லிசை குழுவினர் கலந்து கொண்டு வில்லிசை நிகழ்த்தினர். வில்லிசை என்று சொன்னாலே தென் மாவட்டம் தான் ஆகையால் வில்லிசையில் ஒவ்வொருவரும் விதவிதமாக பாடினார்கள். விதவிதமாக பேசினார்கள். எல்லோரையும் மகிழ்ச்சி அடைய செய்தார்கள். இதில் உறுமி மேளம்., நையாண்டி மேளம் உட்பட பல மேளங்கள் களத்தில் மக்கள் பார்வையை திசை திருப்பியது விழிப்புணர்வு பேரணியானது தூத்துக்குடி எங்கும் பரபரப்பை உருவாக்கியது. விழாவை  சோபியா ராணி தொகுத்து வழங்கினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழன்டா இயக்கம், கலைக்குழு, கலைக்கூடம், சின்னத்துரை & கோ, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சத்யா இணைந்து நடத்தியது.


Share:


Leave a Comment
Search
Most Popular