தூத்துக்குடியில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி
Tamilnadu Thoothukkudi
By admin on | 2025-01-24 10:28:17
தூத்துக்குடியில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி

தூத்துக்குடியில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நாளை நடைபெறுகிறது அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ் மொழி காக்க உயிர் நீத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜனவரி 25ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் மொழிப்போர் தியாகிகள் தினமாக  அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.  திமுக சார்பில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் படி தலைமைகழகம் உத்தரவிற்கிணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் சனிக்கிழமை நாளை மாலை 5 மணிக்கு சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் மாணவரணி மாவட்ட செயலாளர் சீனிவாசன்  தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் நான் மற்றும்  தலைமைக் கழக பேச்சாளா்கள் அத்திபட்டு சாம்ராஜ் ரம்ஜான்பேகம், மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மாநகர செயலாளர் ஆனந்தசேரகன், மேயர் ஜெகன் பொியசாமி, உள்ளிட்ட தலைமை பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளாா்கள். 

மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூராட்சி மற்றும் வட்ட, ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள் மாமன்ற உறுப்பினர்கள் முன்னாள் உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், மாணவர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர்கள் என அனைவரும் வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளாா்.


Share:


Leave a Comment
Search
Most Popular