சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவனின் நேர்முக உதவியாளர் கருணாநிதி மறைவு, எம்.பி, அமைச்சர், மேயர், எம்எல்ஏ உள்ளிட்ட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் நேரில் அஞ்சலி!!
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய கருணாநிதி என்ற கருணா திடீரென மறைவுற்றார்.
இதையடுத்து கே.டி.சி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டது. கருணாநிதியின் உடலுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அதுபோல் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, எம்எல்ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஜான் அலெக்ஸாண்டர், ரமேஷ், இராஜா, மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலெட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், சின்னபாண்டியன், சுப்பிரமணியன், கருப்பசாமி, முருகேசன், ராதாகிருஷ்ணன், சின்னமாரிமுத்து, மும்மூர்த்தி, செல்வராஜ், ராமசுப்பு, நவநீதக்கண்ணன், அன்புராஜன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் அந்தோணிஸ்டாலின், மதியழகன், குபேர்இளம்பரிதி, கவிதாதேவி, அபிராமிநாதன், அசோக், சீனிவாசன், ஜெபசிங், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, பிரபு, பார்வதி, பெனில்டஸ், பிரதீப், ஜோசப், நிக்கோலாஸ்மணி, நாகராஜன், ராதாகிருஷ்ணன், டினோ, அருண்குமார், குருராஜ், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், மேகநாதன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாநகர அணி நிர்வாகிகள் அருண்சுந்தர், பரமசிவம், கிறிஸ்டோபர் விஜயராஜ், ஆனந்த சேகர், ரூபஸ், ரூபராஜா, முருக இசக்கி, ஜெயக்கனி, ரவி, செல்வின், சத்யா, பிரவீன்குமார், வினோத், பால்ராஜ், மகேஸ்வரன்சிங், நாராயணவடிவு, பகுதி இளைஞர் அணி அமைப்பாளரகள்; சூர்யா, செந்தூர்பாண்டி, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், செல்வகுமார், சேர்மபாண்டியன், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்நாடு நாடார் பேரவை தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் எஸ்.பி.மாரியப்பன், மதிமுக மாவட்ட துணைச் செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி, இலக்கிய அணி மகாராஜன், முன்னாள் வக்கீல் சங்க தலைவர் செங்குட்டுவன், தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், ஊடகத்துறையைச் சார்ந்த பலர் உள்பட தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்டத்தைச் சார்ந்த, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அம்பா சங்கர், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளரும் மாநகராட்சி கணக்குக்குழு தலைவருமான ரெங்கசாமி, ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ, ரவி, பார்த்திபன், ஜோசப், சரவணக்குமார், பகுதி செயலாளர் சிவக்குமார், ஒன்றிய துணைச்செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், தர்மராஜ் உள்பட தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.