தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 76வது குடியரசு தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தலைமை வகித்தாா். நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரங்கநாதன் வரவேற்புரையாற்றினார். மேயர் ஜெகன் பெரியசாமி தேசிய கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் 2024-25ம் ஆண்டில் அலுவலக பணி மற்றும் மழை வெள்ள காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நிரந்தர மற்றும் தற்காலிக ஓப்பந்த பணியாளர்களுக்கு நற்சான்றிதழ், பொதுமக்களிடையே தேசிய வாக்காளர் தின நாளை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோலமிடும் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட நகர்புற வாழ்வாதார மைய பணியாளர்கள் உள்பட 40 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்து பேசுகையில், வெள்ளைக்காரனை எதிர்த்து சுதந்திரம் அடைந்தோம். பின்னர் குடியரசு தினத்தை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கொடியேற்றும் உரிமையை பெற்றுக் கொடுத்தார். தூத்துக்குடி மாநகராட்சியில் பொறுப்பேற்று இரண்டரை வருடத்தை கடந்து விட்டோம். இரண்டு பக்கமும் சில சமயம் கத்தி போன்று கூர்மையாக இருக்கின்றன. எந்த பக்கம் திரும்பினாலும் குத்தும் கடந்த காலத்தில் பெய்த மழையின் போது மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் அப்பகுதியில் தண்ணீர் தேங்க கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பணியாற்றினோம்.
ஆனால் கடந்த காலத்தில் பெய்த கன மழையாலும் அருகிலுள்ள சில கன்மாய் குளங்கள் உடைப்பு ஏற்பட்டதால் ஊருக்குள் தண்ணீர் வந்தது. பல பகுதிகளில் இரவு பகலாக பல நாட்கள் தொடர்ந்து கண் விழித்துக்கொண்டு உறங்காமல் பணியாற்றினோம்.
உங்களுக்கு வழிகாட்டியாக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், நேரு, மற்றும் பல அமைச்சர்கள், கலெக்டர், உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முழுமையாக இருந்து பணியாற்றினார்கள். பல தேசிய நெடுஞ்சாலைகளிலும் நான்கு அடி தண்ணீர் இருந்த நிலையில் அதை கடந்து தான் ஊருக்குள் தண்ணீர் வந்தும் பாதிப்பு ஏற்படுத்தியது.
ஆனால் ஆணையர் மக்களின் குறைகளுக்கு தீர்வு காண்பதில் முன்னோடியாக இருந்து ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். ஒவ்வொரு சாலை பகுதியும் 3 வருடம், 5 வருடம் என சில விதிமுறைகளின்படி உள்ளன. ஊர் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக புதுமையான பல திட்டங்களையும், செயல்படுத்த வேண்டும் என்ற கடமையில் நாங்கள் இருக்கிறோம்.
மாநகரில் தற்போது 7 லட்சத்திற்கு மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். 2008ல் துணை முதலமைச்சராக இருந்து தற்போது முதலமைச்சராக பணியாற்றும் ஸ்டாலின் கொண்டு வந்த பக்கிள் ஓடை திட்டம் மூலம் கடலுக்கு மழை நீர், கழிவு நீர் கொண்டு செல்லப்படுகிறது. அதையும் சுத்திகரிக்கப்பட்டு செடி வளர்ப்பதற்கென்று ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மாநகர பகுதியில் 206 பூங்காக்கள் இருக்க வேண்டிய இடத்தில் 41 பூங்காக்கள் தான் இருந்தன. இப்போது புதிய பூங்காக்கள் பல உருவாக்கப்பட்டுள்ளது.
பலர் பூங்கா இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். அதை படிப்படியாக மீட்போம். முத்துநகர் கடற்கரை ரோச் பூங்கா என பல இடங்கள் அழகுபடுத்தப்பட்டு, தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் உள்ள பலரும் ஆரோக்கியத்தை பேணி பாதுகாத்திடும் வகையில் நடைபயிற்சி, யோகா உள்ளிட்டவைகள் மூலம் பலனடைந்து வருகின்றனர். வி.இ.ரோடு, ஜெயராஜ் ரோடு பகுதிகளில் பொதுமக்கள் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு நல்லதொரு அமைப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். வளர்ந்து வரும் மாநகர பகுதிகளில் உள்ள தொழிலதிபர்கள் மாநகர வளர்ச்சிக்கும் துணை நிற்க வேண்டும். பொதுமக்களின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றும் மாநகராட்சி பகுதியில் பல நூலகங்கள் இருந்தாலும் புதிதாக குறிஞ்சிநகா் பகுதியில் ஓரு நூலகம் அமையபடவுள்ளது. 2500 புதிய சாலைகள் அமைக்கப்பட்டு 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மீதியுள்ள 20 சதவீத பணிகளும் விரைவில் முடிவு பெறும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் துறைமுகம் விமானநிலையம் சாலை இரயில் என வழித்தடம் இருப்பதன் மூலம் நல்ல வளர்ச்சியடைந்து வருகிறது.
தொழிற்சாலை நிறைந்த பகுதியாக இருந்தாலும் மாசு இல்லாத மாநகராட்சியை உருவாக்கியுள்ளோம் தருவைகுளம் உரக்கிடங்கில் பல லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. தொடர்ந்து எல்லா பகுதிகளிலும் அந்த பணி தொடர்கிறது. குறிப்பாக பொதுமக்கள் நீா்வழித்தடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் நெகிழிகள் கழிவுகளை போட வேண்டாம். பயன்படுத்தவும் வேண்டாம். எதிர்காலத்தில் இது சம்பந்தமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டாவது சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்ற நாம் வரும் காலங்களில் தமிழகத்தில் சிறந்த முதல் மாநகராட்சியாக தேர்வு செய்வதற்கு அனைவருடைய ஒத்துழைப்பு அவசியம் என்று பேசினாா்.
விழாவில் மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, கலைச்செல்வி, மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், சுரேஷ்குமார், சரவணக்குமார், ராஜதுரை, பட்சிராஜ், விஜயகுமார், கண்ணன், பொன்னப்பன், முத்துவேல், பவானி மார்ஷல், ரெக்ஸின், ராஜேந்திரன், ஜாக்குலின்ஜெயா, தெய்வேந்திரன், சுயம்பு, ரெங்கசாமி, ஜாண்சிராணி, ஜெயசீலி, ரிக்டா, சுப்புலட்சுமி, விஜயலட்சுமி, பேபி ஏஞ்சலின், சரண்யா, சோமசுந்தாி, காங்கிரஸ் கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடின்டா, கற்பக கனி, கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் முத்துமாரி, தனலெட்சுமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மும்தாஜ், உதவி ஆணையர்கள் சுரேஷ்குமாா், வெங்கட்ராமன், கல்யாணசுந்தரம், பாலமுருகன், உதவி செயற்பொறியாளர் திட்டம் ராமசந்திரன் உதவி செயற்பொறியாளர்கள் காந்திமதி, இர்வின்ஜெபராஜ், முனீர் அகமது, நகர் நல அலுவலர் அரவிந்த்ஜோதி, சுகாதார ஆய்வாளர்கள் ராஜசேகர், ராஜபாண்டி, நெடுமாறன், ஸ்டாலின் பாக்கியநாதன், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். உதவி பொறியாளர் சரவணன் நன்றியுரையாற்றினார்.