திருநெல்வேலி மாவட்டத்தில் சிறந்த ஊராட்சி ஒன்றியமாக நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம் தேந்தெடுக்கப்பட்டு, அதற்கான சான்றிதழையும், விருதினையும் மாவட்ட ஆட்சியர் திரு. கார்த்திகேயன் சிறந்த வட்டார வளர்ச்சிக்கான விருதையும் நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி. யமுனா அவர்களும் பெற்றுக் கொண்டார் என்பது நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் என்ற முறையில் எனக்கு மிகப் பெருமையான விஷயம். மாண்புமிகு திராவிட மாடல் நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐயா பெரியசாமி அவர்களின் தலைமையில் பின்தங்கிய இந்த ஊராட்சி ஒன்றியத்தை இன்னும் ஒரு சில வருடங்களில் இந்திய அளவில் மிகச்சிறந்த ஊராட்சி ஒன்றியமாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் ஆகியோரின் உதவியுடன் இன்னும் வேகமாக இந்த ஒன்றியத்தை முன்னேற்ற பாடுபடுவேன் என்றும் இந்த நல்ல நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் தொடர்ந்து இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
-சௌம்யா ஆரோக்கிய எட்வின்,
நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்